Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் ஷிவானியின் கள்ளக் காதலர்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் இந்த வாரம்!
19 வயதே ஆன சிவானியை பிக் பாஸ் வீட்டில் போல் வந்ததிலிருந்தே தன் கைக்குள் போட்டுக் கொண்டார் பாலா.
பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன் பாலா பல பெண்களுடன் சில்மிஷ வேலைகள் செய்துள்ளார். ஆனால் அந்த வீடியோக்கள் தற்போதுதான் வெளியாகியுள்ளது.
மேலும் பிக் பாஸ் வீட்டில் ஓவர் சீன் போடும் பாலாவை பலருக்கும் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் ஓவியா ரேஞ்சுக்கு பாலாவை பில்டப் செய்த அவரது ரசிகர்களே தற்போது கழுவி ஊற்றி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க பாலா, சிவானியுடன் சேர்ந்து கொண்டு காதல் கச்சேரி நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென ஷிவானியின் மீது காதல் இல்லை எனவும், காதல் வரவும் வராது எனவும் கூறி அவரது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இதனால் தற்போது இருவருக்கும் ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய ஷிவானியின் கள்ளக்காதலரான பகல் நிலவு ஆசீம் என்பவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளார்.
இதனால் தன்னுடைய பழைய காதலனை கண்ட சந்தோஷத்தில் சிவானி ஆசீமுடன் சேர்ந்து கொண்டு பாலாவை எதிர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வாரம் இரண்டு பேர் ஒரே நேரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என தெரிகிறது. இப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

azeem-shivani-cinemapettai
சிவானிக்கும் நடிகர் ஆசீம் என்பவருக்கும் இடையில் இருந்த உறவு காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது சமீபத்தில் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. ஆசிம் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
