Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷிவானியை பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என கிண்டல் செய்த ரசிகர்கள்.. பதிலுக்கு கொடுத்த செம பதிலடி
வெறும் 19 வயதில் இப்படியெல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா என முன்னணி நடிகைகளுக்கு தொடர்ந்து தண்ணி காட்டி வருகிறார் ஷிவானி நாராயணன்(shivani narayanan).
பகல் நிலவு மற்றும் இரட்டை ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன். சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இது ஒருபுறமிருக்க சீரியல்களில் இருந்து விலகிக் கொண்ட சிவானி அடுத்ததாக சினிமாவில் பல வாய்ப்புகளை தேடி வருகிறாராம்.
அதற்கு முதற்கட்டமாக விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளாராம். யாஷிகா இல்லாத குறையை இவர்தான் தீர்த்து வைக்கப் போகிறாராம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து சமூக வலைதளங்கள் மூலம் தன்னுடைய ரசிகர்களை தங்களது கைக்குள் வைத்துக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ஷிவானி நாராயணன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என அவரை கிண்டல் செய்தார்.
அதற்கு சிவானி நாராயணன், நீங்கதான் எனக்கு சர்ஜரி பண்ணீங்களா? என பதிலடி கொடுத்துள்ளார். சமீபகாலமாக நடிகைகளை ரசிகர்கள் வம்புக்கு இழுத்து வருவது தொடர்ந்து நடைபெறுகிறது.
