Tamil Cinema News | சினிமா செய்திகள்
பென்சில் புடிக்கிற வயசுலயே அந்த மாதிரி போஸ் கொடுத்த ஷிவானி.. அப்போ எப்பவுமே இப்படித்தானா?
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தும் தூணாக, அந்த சேனலில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கி இருப்பவர்தான் ஷிவானி நாராயணன்.
மேலும் ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை பற்றிய விபரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது நாம் அறிந்தது தான்.
அந்த வகையில், ஷிவானியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ள ஷிவானி இணையத்திற்கு எப்போதோ பரிச்சயமானவர் தான். ஏனென்றால் அவருடைய சமூக வலைதள பக்கம் முழுவதும் போட்டோக்களால் நிரப்பியதோடு, 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளார் ஷிவானி.
மேலும் ஷிவானி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான ஃபேன்ஸ் உள்ளனர்.
இந்த நிலையில், ஷிவானியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஷிவானி செம க்யூட்டாக இருப்பதோடு மட்டுமில்லாமல், தற்போது எப்படி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புன்னகைத்து போஸ் கொடுக்கிறாரோ, அதேபோல்தான் அப்போதும் போஸ் கொடுத்திருக்கிறார் ஷிவானி.

Shivani
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் ஏகபோகமாக லைக்குகளையும் பெற்று வருகிறது.
