ஒரே வருடத்தில் 8 மெகா ஹிட் படங்களா.. வெள்ளி விழா நாயகனாக அலறவிட்ட சிவாஜி

சினிமாவில் அதிர்ஷ்டம் என்பது மிக முக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் வரும் நேரத்தில் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஒரு கால கட்டம் வந்தது. 1961 ஆம் ஆண்டு சிவாஜி நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

பாசமலர் : சிவாஜி கணேசன், சாவித்ரி நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாசமலர். இன்றும் அண்ணன், தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இப்படம் கூறப்படுகிறது. இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற வெள்ளி விழா கண்டது. மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பாசமலர் படம் பெற்றது.

பாவமன்னிப்பு : சிவாஜிகணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன், எம் ஆர் ராதா மற்றும் பலர் நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாவமன்னிப்பு. இப்படமும் வெள்ளிவிழாக் கண்ட தேசிய விருதை பெற்றது. இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் இருந்தனர்.

எல்லாம் உனக்காக : சுபராவ் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் எல்லாம் உனக்காக. பாசமலர் படத்தில் சிவாஜி, சாவித்திரி அண்ணன் தங்கையாக நடித்திருந்த நிலையில் இப்படத்தில் காதலர்களாக நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு கேவி மகாதேவன் இசை அமைத்திருந்தார்.

புனர்ஜென்மம் : ஆர் எஸ் மணி இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ராகினி ஆகியோர் நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புனர்ஜென்மம். இப்படத்திற்கு பாடல் வரிகளை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருந்தார். இப்படம் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது.

பாலும் பழமும் : சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாலும்-பழமும். இப்படத்திற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படம் கணவன், மனைவி உறவை வெளிக்காட்டி இருந்தது.

ஸ்ரீ வள்ளி : சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலர் நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஸ்ரீ வள்ளி. இப்படத்தில் சிவாஜி கணேசன் முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்திருந்தனர். இப்படத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளனர். பக்தி திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

கப்பலோட்டிய தமிழன் : சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடிப்பில் 1961 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கப்பலோட்டிய தமிழன். இந்திய விடுதலைக்காக போராடிய தலைவர்களுள் ஒருவரான வ.உ.சியை போற்றும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

மருத நாட்டு வீரன் : சிவாஜி கணேசன், ஜமுனா, பிஎஸ் வீரப்பன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மருத நாட்டு வீரன். இப்படத்தில் தளபதி ஜீவகன் வேடத்தில் சிவாஜிகணேசன் நடித்து இருந்தார். இப்படம் சிவாஜி கணேசனின் நடிப்பிற்காகவும், கண்ணதாசன் மற்றும் மருதகாசியின் பாடல் வரிகளுக்காகவும் பாராட்டை பெற்றது.

Next Story

- Advertisement -