சிவாஜியை பட்டை தீட்டிய எம் ஆர் ராதா.. நடிகவேல்-லை பார்த்து மிரண்ட நடிகர் திலகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையான ஒரு நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்தது இல்லை. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் அசால்டாக பேசக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் அனைத்து பாவங்களையும் தனது முகத்தில் உடனே காட்டக் கூடியவர்.

சிவாஜி கணேசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. சாமானிய மக்கள் முதல் அரசர்கள் வரை என கதாபாத்திரங்களாக இருந்தாலும் கனகச்சிதமாக நடிப்பார்.அவ்வாறு தன்னுடைய அபாரமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் சிவாஜி இடம்பிடித்துள்ளார். எம் ஆர் ராதா நாடக கம்பெனியில் இருந்து தான் சிவாஜி சினிமாவிற்குள் நுழைந்து உள்ளார்.

பல மேடைகளில் தன்னுடைய குரு எம் ஆர் ராதா என சிவாஜி கூறியிருந்தார். மேலும் அவரைப்பார்த்து வளர்ந்தவன் நான், என்றும் பெருமையாக பேசி வந்தார் சிவாஜி. அவ்வாறு எம் ஆர் ராதா என்னும் நடிகவேல்-லை பார்த்து பார்த்துதான் சிவாஜி நடிப்பைக் கற்றுக் கொண்டுள்ளார்.

சினிமாவில் எம் ஆர் ராதா கொடூர வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதே காலகட்டத்தில் சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் எம் ஆர் ராதா தான் நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் எம் ஆர் ராதாவிடம் பல நல்ல குணங்கள் இருந்ததாம்.

அதாவது எம் ஆர் ராதா தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்க மாட்டார், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவாராம். இதைப் பற்றி யாராவது கேட்டால் நம்மை நம்பி பணத்தை போடும் தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று எம் ஆர் ராதா கூறுவாராம்.

அதுமட்டுமின்றி நமக்காக மற்ற எல்லோரும் காத்திருப்பார்கள் அவர்கள் நேரத்தை நாம் வீணடிக்கக் கூடாது என நாடக குழுவில் உள்ளவர்களுக்கு அறிவுரை வழங்குவாராம். எம் ஆர் ராதா வில்லத்தனத்தில் மூலம் மக்கள் மனதில் பதிந்து இருந்தாலும் நிஜத்தில் அவர் ஒரு ஹீரோதான்.

- Advertisement -spot_img

Trending News