8 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய ஒரே படம்.. அப்பவே மாஸ் காட்டிய சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் நடிக்கும் படங்களின் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போய் தத்ரூபமாக நடித்திருப்பார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெரும். நடிப்புக்கு இலக்கணம் ஆன சிவாஜி போல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

நாடகத்துறையின் பின்னணியிலிருந்து வந்து பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிவாஜி நடித்துள்ளார். இவர் பாசமலர், வசந்த மாளிகை, வீரபாண்டிய கட்டபொம்மன், கந்தன் கருணை என பல படங்களில் சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

சிவாஜி நடிப்பில் வெளியான படம் எட்டு திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அது சிவாஜியின் 200வது படமான திரிசூலம். கே விஜயன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

திரிசூலம் படத்தை சாந்தி நாராயணசாமி மற்றும் சிவாஜி புரடக்ஷன் தயாரித்தது. இப்படத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது.

அதுமட்டுமல்லாமல் சிவாஜி படங்களிலேயே மிகப்பெரிய வசூல் செய்த படம் என்றால் அது திரிசூலம் தான். இப்படம் சென்னையில் மட்டும் 900 நாட்கள் ஹவுஸ்புல்லாக இருந்தது. அதேபோல் மதுரையில் உள்ள திரையரங்குகளில் 375 நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடியது.

திரிசூலம் படம் அப்போதே பல திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டதால் இப்படம் 3 கோடி வசூல் சாதனை செய்தது. சிவாஜி கணேசன் பல படங்கள் நடித்திருந்தாலும் திரிசூலம் படத்திற்கு தனி இடம் உணடு. தற்போதும் திரிசூலம் படத்தை தொலைக்காட்சியில் போட்டால் பெரியவர்கள் முதல் இக்காலத்து குழந்தைகள் வரை பார்ப்பார்கள்.

Next Story

- Advertisement -