Connect with us
Cinemapettai

Cinemapettai

yogi babu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நித்தியானந்தா கெட்டப்பில் யோகிபாபு.. காசேதான் கடவுளடா லேட்டஸ்ட் அப்டேட், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் கிளாசிக் நேரங்களில் வெளியாகி வெற்றி கண்ட படங்களின் பல்வேறு படங்கள் இப்போதைய டிஜிட்டல் காலத்தில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. 1972ல் வெளிவந்து வெள்ளிவிழா கண்ட படம் காசேதான் கடவுளடா.

முத்துராமன், தேங்காய் சீனிவாசன் மற்றும் வெண்ணிறாடை மூர்த்தி என காமெடி கலக்கலாக அமைந்தது படம். அன்றைய ரசிகர்ககளை சிரித்து ரசிக்க வைத்த இப்படம் இப்போது அதே டைட்டிலில் ரீமேக் ஆகிறது.

யோகிபாபு, குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த புகழ் சிவாங்கி, மனோபாலா, ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய் என இயக்குனர் கதாப்பாத்திரங்களை கச்சிதமாய் செதுக்கியுள்ளார்.

shiva

shiva

ஜூலை மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 80சதவீதம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் டிரைலர் டீசர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களே சிலரின் கதாப்பாத்திரங்களை காட்டியுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தை கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனமும் எம்.கே.ஆர்.புரோடக்சன்ஸ் நிறுவனுமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு ஆர்.கண்ணன் இசையமைக்கிறார். மேலும் படத்தில் லீட் ரோலில் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த நடிக்கிறார்கள்.

இப்படம் இந்த ஜோடி இணையும் இரண்டாவது படமாகும் வணக்கம் சென்னை படத்தில் சிவாவுடன் இணைந்த பிரியா ஆனந்தின் காம்போ கலைகட்டியது குறிப்பிடதக்கது. அதிவிரைவாக எடுக்கப்படும் இப்படத்தின் வெியீடு குறித்து இப்போது வரை பேசப்படவில்லை.

Continue Reading
To Top