ஷிகர் தவான் கேரியர் முடிவுக்கு வந்ததன் பின்னணி.. ரோஹித் சர்மா பேராதரவு கொடுத்த மாற்று வீரர் 

2010ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் களம் இறங்கினார். தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்த அவருக்கு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் தன்னுடைய பார்மை நிரூபித்து இந்திய அணிக்குள் 2013 ஆம் ஆண்டு திரும்ப வந்தார்

2013ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் தன்னுடைய அசரத்தனமான விளையாட்டை நிரூபித்தார். இந்திய அணியின் மற்றொரு இடது கை சேவாக்கென பெயர் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 187 ரன்கள் அதிரடியாக அடித்த தன்னுடைய கம்பேக்கை   வெற்றிகரமாக நிரூபித்தார்.

ஒரு நாள், டெஸ்ட், டி20 போட்டி என அனைத்து போட்டிகளிலும் நிலையான ஓப்பனிங் வீரராக மாறினார் ஷிகர் தவான். இவரும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து பல போட்டிகளில் 100  ரன்கள் பார்ட்னர்ஷிப்  அமைத்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்கள். அதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தொடர்ந்து 4ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி வந்தார்.

ஐசிசி நடத்தும் அனைத்து போட்டிகளிலும் ஷிகர் தவானின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.  எல்லாப் போட்டிகளிலும் தன்னுடைய  கன்சிஸ்டெண்சியை காட்டி மிரட்டினார் தவான். இப்படி சென்று கொண்டிருந்த அவரின் கிரிக்கெட் கேரியருக்கு மீண்டும் ஆபத்து வந்தது

ரோஹித் சர்மா பேராதரவு கொடுத்த மாற்று வீரர்

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு கெட்ட நேரம் தொற்றிக் கொண்டது. தவான் 20 ஓவர் போட்டிகளில் நிதானமாக ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. அப்பொழுது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தான் செயல்பட்டார். அதன்பின் அவருக்கு 20 ஓவர் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு பறிபோனது.

2022ஆம் ஆண்டுகளில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றார். அப்பொழுது  ஷிகர் தவானுக்கு தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. 20 ஓவர் போட்டியில் இவர் இடத்தை பிரித்வ் ஷா பிடித்தார் அதை போல்  ஒரு நாள் போட்டிகளில் இப்பொழுது இவர் இடத்தை சுப்மன் கில் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மா சுப்மன் கில்லுக்கு பேராதரவு கொடுத்து வருகிறார்.

Next Story

- Advertisement -