fbpx
Connect with us

Cinemapettai

காயம் அடைந்த ஷிகர் தவானின் தற்போதைய நிலை – பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.

Sports | விளையாட்டு

காயம் அடைந்த ஷிகர் தவானின் தற்போதைய நிலை – பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.

உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது.

ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் வெற்றி பாதைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். பேட் கம்மின்ஸ் வீசிய பந்து இவர் கையில் பட்டது , எனினும் தொடர்ந்து ஆடினார். சேஸிங்கில் பீலடிங் சமயத்தில் களம் இறங்கவில்லை. இந்நிலையில் விரலில் ஹார் லயன் பிராக்ச்சர் என சொல்லப்பட்டது.

லீட்ஸ் சென்று ஸ்கேன் எடுத்தார். அந்த நேரத்தில் அடுத்த இரண்டு போட்டிகள் ரெஸ்ட் எடுப்பார், பின்னர் ஆடுவார்; ஆனால் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் தேவை; ஷ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷா அல்லது ரிசப் பண்டில் யாரேனும் ஒருவர் சேற்கப்படலாம் என்ற வதந்தியும் பரவியது.

ஆனால் பிசிசிஐ தங்கள் ட்விட்டரில், “தவான் அவர்கள் மருத்துவ குழுவின் கண்காணிப்பில் உள்ளார். மேலும் தவான் இங்கிலாந்தில் தொடர்ந்து இருக்கட்டும் என பிசிசிஐயின் நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளது. அவரது உடல் தகுதி முன்னேற்றத்தை கூர்ந்து கவனிப்போம்.” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தற்பொழுது மாற்று வீரர் அறிவிக்கும் பட்சத்தில், தவான் டீம்மில் இருந்து நீக்கப்படுவார். அவர் காயம் குணம் அடைந்தாலும் ஆடும் வாய்ப்பு வழங்கப்படாது. நீக்கப்படும் பட்சத்தில் வேறு வீரர் காயம் அடையும் பட்சத்தில் அவருக்கு மாற்றாகவே இவரை சேர்க்க முடியும். எனவே தான் இந்திய நிர்வாகம் பொறுமையை கடைபிடிக்கிறது.

ஐசிசி நடத்தும் போட்டிகளான உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் போட்டிகளில் இதுவரை 20 போட்டிகளில் ஆடியுள்ள தவான் ஆறு சதம், மற்றும் நான்கு 50 அடித்துள்ளார். 65.15 சராசரி, 98.25 சிட்ரிக் ரேட். இப்படி பட்டவீரரை எந்த டீம் தான் இழக்க விரும்பும்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top