ஷிகர் தவான்

இந்திய அணியின் அதிரடி துவக்க பேட்ஸ்மேன். தனி ஆளாக எதிரே அணியை தும்சம் செய்யும் திறன் உடையவர். கடந்த சில சீசனாக சன்ரைஸர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சீசன் கூட வார்னர் அவர்கள் விளையாட ஆஸ்திரேலிய போர்டு தடை செய்ததன் காரணமாக, கேப்டனாக தவான் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் நியூஸிலாந்தின் வில்லியம்சன் கேப்டன் ஆனார்.

shikar dhawan

கடந்த சீசனில் ஷிகர் தவானை ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. அவரை ஏலத்தின் ( RTM கார்டு) மூலம் ரூ.5.2 கோடிக்கு எடுத்தது. ஏனென்றால் அந்த அணி புவனேஸ்வர் குமார் மற்றும் வார்னரை தக்கவைத்து.

கடந்த சில நாட்களாகவே தவான் தனக்கு தனக்கு நிர்ணயித்த விலையில் ஷிகர் தவான் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாயின. எனினும் அதிகாரபூர்வமாக இன்று சன்ரைஸர்ஸ் நிர்வாகம் பணம் காரணமாக அவர் அதிருப்தி ஆனதால் நாங்கள் ரிலீஸ் செய்கிறோம். அவர் இதுவரை விளையாடியதற்கு நன்றி, அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆல் தி பெஸ்ட் என்று கூறியுள்ளனர்.

ஷிகர் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்து விட்டு அவருக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள விஜய் சங்கர் (ரூ.3.2 கோடி), ஷபாஸ் நதீம் (ரூ.3.2 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.55 லட்சம்) ஆகியோரை தங்கள் அணிக்கு டிரேட் செய்துள்ளனர்.

முதல் சீசன் டெல்லி அணிக்கு ஆடிய தவான் அடுத்து மும்பை, டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைஸர்ஸ் அணிக்கு ஆடினார். தற்பொழுது 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தன் சொந்த மண் திரும்புகிறார்.