Sports | விளையாட்டு
சச்சின் ராமர் என்றால், நான் ஹனுமான்! விரேந்தர் ஷேவாக்

விரேந்தர் சேவாக்
தன் ஓய்விற்கு பின் எடுத்துள்ளதோ பல அவதாரங்கள். மனிதர் ஏக பிஸி. இவ்வளவு பிஸியிலும் மனிதர் தன் ட்விட்டரில் ஆக்ட்டிவாகவே இருப்பார். இவருக்கு 17.5 மில்லியன் பாலோயர்ஸ் உண்டு. சக வீரர்களை கலாய்க்கும் விதமாக பிறந்தநாள் வாழ்த்து கூறுவது, அரசியல் அல்லது பொது பிரச்னையை நக்கல் அடிப்பது என்று சுவாரசியமாக இருக்கும் இவர் ட்விட்டர் பக்கம்.
வாட் தி டக்
கிரிக்கெட்டை காமெடியுடன் கலந்து வழங்கும் நிகழ்ச்சி. நட்சத்திர வீரர்களை கெஸ்ட் ஆக அழைத்து தன் ஸ்டைலில் பங்கம் செய்வார் விக்ரம் சாதியா. பன்னாட்டு நிறுவனத்தில் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஸ்டாண்ட் – அப் காமெடி, புக் எழுதுவது, நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என்று அசத்துபவர்.
இவரின் நிகழ்ச்சியில் தான் ஷேவாக் மற்றும் சச்சின் கலந்து கொண்டனர். முழு நிகழ்ச்சி யூ-டியூப்பில் உள்ளது.
அப்பொழுது தான் சுத்தியலை கதை போல வைத்து சேவாக் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.
