Connect with us
Cinemapettai

Cinemapettai

Virender-Sehwag-dhoni

Sports | விளையாட்டு

சேவாக்கின் பலே ஐடியா, அந்த வீரரை ஓபனிங் இறக்கி விடுங்க.. மும்பை அணிக்கு செக்!

ஹைதராபாத் அணியின் துவக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா,இவர் தற்போது ஓப்பனிங்கில் சொதப்பி வருகிறார்.இவர் தன் வாழ்நாளில் மோசமான பார்மில் உள்ளார்.

எனினும் தவானின் அதிரடி ஆட்டத்தாலும் நல்ல பார்மில் இருப்பதாலும் முதல் முறையாக டெல்லி கேப்பிடல் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆடும் டெல்லி கேபிடல்ஸ் அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த சீசனில் மூன்று முறை மும்பையை சந்தித்துள்ளது டெல்லி அணி,மூன்று முறையும் தோல்வியை தழுவியது.டெல்லி அணிக்கு கடைசி சில லீக் போட்டிகளில் பெரிய பலவீனமாக இருந்தது துவக்கம் தான். துவக்க வீரராக ப்ரித்வி ஷா, அஜின்க்யா ரஹானே சரியாக செயல்படவில்லை.

இந்த நிலையில் தவானுடன் யாரை துவக்க வீரராக ஆட வைக்கலாம் என சேவாக் பட்டியலிட்டுள்ளார். அவர் சொன்ன வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், அவர் மிடில் ஆர்டரில் ஆடி வந்தார்.

சேவாக் கூறியதைப் போல் இரண்டாம் தகுதிப் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக செயல்படுத்தி வெற்றி பெற்றது டெல்லி.

கடந்த போட்டியில் ஸ்டோய்னிஸ் அதிரடியாக 38 ரன்கள் குவித்தார். அவருடன் ஆடிய தவான் 78 ரன்கள் குவிக்க டெல்லி அணி பெரிய ஸ்கோர் எடுத்து வெற்றி பெற்றது. சேவாக் திட்டத்தை சத்தமே இல்லாமல் பாண்டிங் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.

marcus-stoinis

marcus-stoinis

Continue Reading
To Top