Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

தன்னையே உதாரணமாக்கி, தோனியின் ஒய்வு பற்றி கருத்து கூறியுள்ள சேவாக். வில்லங்கம் ஏதும் இல்லையே தலைவா  

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் மூன்று விஷயங்கள், பயிற்சியாளர் யார், நான்காம் இடத்தில யார் பேட்ஸ்மேன், தோனி ரிட்டையர் ஆகப்போகிறாரா என்பது தான். பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடருகிறார். ஒரு நாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர், டி 20 யில் மனிஷ் பாண்டே ஆடி வருகின்றனர். எனினும் தோனியின்  முடிவு என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. உலகக்கோப்பை முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பதில் ராணுவப்பயிற்சி சென்றார் தோனி.

இந்நிலையில் சேவாக் பின்வருமாறு பேசியுள்ளார்.

“ரிட்டயர்மென்ட் முடிவை தோனி தான் எடுக்க வேண்டும். அவர் பிட்டாக இருந்து, அணிக்கு நல்ல பங்களிப்பை தர முடியும் என்றால் அவர் தொடர்ந்து ஆட வேண்டும். எனினும் தேர்வாளர்கள் தோனி தேவையில்லை என முடிவு செய்தால், அதனை அவரிடம் சொல்ல வேண்டும், அவருக்கு கடைசியாக ஒரு சீரிஸ் கொடுக்க வேண்டும்.

இது போன்ற தகவல் பரிமாற்றம் தேர்வாளர்கள் மற்றும் வீரர்கள் இடையே வேண்டும். அது போல தற்பொழுது உள்ளதா என தெரியவில்லை. தோனி முதல் சாய்ஸ் கிடையாது என தேர்வாளர் பிரசாத் கூறியதை நான் படித்தேன். அப்படியெனில் பண்ட் முதல் சாய்ஸ், தோனி பேக் அப் என்பது நடக்காத காரியம் ஆகிறது. சிறுது நேரம் எடுத்துக்கொண்டு எது சரியான சமயம் என முடிவு செய்து தோனி தான் தனது ஒய்வு  பற்றி  பேச வேண்டும்.

வீரர்களிடம் பேசுவது போர்டின் பணி அல்ல, தேர்வாளர்கள் வேலை தான். தகவல் பரிமாற்றம் என்றுமே பிரச்சனை தான். எனக்கு கூட யாரும் சொல்லவில்லை. மேலும் என்னை போல வேறு சிலரும் இது போன்று அனுபவித்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top