ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ரோஸ் மெக்கோவன் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் வந்து குவிகின்றன. இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பயந்து அமைதியாக இருந்த நடிகைகள் தற்போது தான் தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி தைரியமாக வெளியே சொல்லத் துவங்கியுள்ளனர்.

rose-mcgowan

ஹார்வியின் முகத்திரையை நடிகைகள் கிழித்துள்ளனர் .ஹார்வி வெயின்ஸ்டீன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னணி ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன் தெரிவித்தார்.

மேலும் அவர் ஹார்வியை ட்விட்டரில் விளாசித் தள்ளினார்.ரோஸ் ஹார்வியை விளாசியதால் அவரின் ட்விட்டர் கணக்கு கடந்த புதன்கிழமை 12 மணிநேரம் முடக்கப்பட்டது. இதை எதிர்த்து பல பெண்கள் ட்விட்டரை புறக்கணித்தனர்.

ரோஸ் மெக்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் ட்விட்டரை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் #WomenBoycottTwitter என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

ஹார்வி வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராய் மீதும் கை வைக்க முயன்றார். ஹார்வி தங்களை பலாத்காரம் செய்ததாக 2 நடிகைகள் பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

rose-mcgowan

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். பிரெய்ட் அண்ட் பிரிஜுடிஸ், தி மிஸ்டரஸ் ஆப் ஸிபிலிஸ், புரவோகேட் படங்களில் நடித்துள்ளார்.

ஹாலிவுட் படங்களின் படப்பிற்காக அமெரிக்க சென்றிருந்தபோது ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் ஐஸ்வர்யராயிடம் தவறாக நடக்க முயன்ற தகவல் ஒன்றை அவரது மேலாளர் சிம்ஓன் ஷிப்ல்டு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹாலிவுட் தயாரிப்பாளார் ஹார்வே வெயின்ஸ்டெய்ன் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒரு படம் தயாரிக்க முடிவு செய்திருந்தார். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கூறியிருந்தார்.

நானும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தேன். ஐஸ்வர்யாவை யார் சந்தித்தாலும் அவர்களுடன் நான் இருப்பது வழக்கம். அதேபோன்று ஐஸ்வர்யா ராய், ஹார்வே சந்திப்பிலும் நான் உடன் இருந்தேன்.ஆனால் ஹார்வே என்னை வெளியே போகும்படி சொன்னார்.

Rose McGowan

நான் அதை மறுத்து விட்டேன். காரணம் எதற்காக அவர் அப்படிச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்திப்பு முடிந்து திரும்பும்போது என்னை தனியாக அழைத்து கடுமையாக திட்டினார். நான் உன்னை வெளியே போகச் சொன்னபோது ஏன் போகவில்லை.

ஐஸ்வர்யாவை நான் தனியாக சந்திப்பதை ஏன் தடுத்தாய். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். அவரது நோக்கம் தெரிந்த நான் நீ நினைப்பது போன்ற ஆள் ஐஸ்வர்யா கிடையாது என்று கடுமையாக திட்டிவிட்டுச் சென்றேன்.அதன் பிறகும் அவர் தன் செல்வாக்கால் என்னை மிரட்டினார்.

Aishwarya Rai

அப்போது அவர் கூறிய வார்த்தைகள் மிகவும் கடுமையானவை. என்னை நம்பி வந்த ஐஸ்வர்யாராய்க்கு நல்ல பாதுகாப்பு தர வேண்டியது என் கடமை. அதைத்தான் செய்தேன். ஐஸ்வர்யா ராயின் மூச்சு காற்றைக்கூட தொடுவதற்கு நான் ஹார்வேக்கு வாய்ப்புத் தரவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதே தயாரிப்பாளர் மீது இதற்கு முன்பு ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலிதான ஜூலி, எம்மா தாம்சனும் பாலியல் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.