2022ல் அதிர்ஷ்டம் இல்லாமல் போன ஒரே நடிகை.. தொடர்ந்து 4 படம் தோல்வி தளபதியுடன் நடித்தும் வொர்க் அவுட் ஆகல

கோலிவுட்டில் உச்ச நாயகனாக இருக்கும் தளபதி விஜய்க்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம். இதனால் அவருடன் ஜோடி போடும் கதாநாயகங்களையும் தளபதி ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். ஆனால் விஜய்யுடன் இணைந்து நடித்தும் பிரபல நடிகைக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

இவர் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தில் நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. இவர் 2019 மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற பின் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். இருப்பினும் 2022-ல் தொடர்ந்து 4 தோல்வி படங்களை கொடுத்து இந்த வருட டிசாஸ்டர் நடிகையாக மாறிவிட்டார்.

ராதே ஷ்யாம்: பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்ட காதல் காவியம் என்று இந்தியாவின் டைட்டானிக் என பில்டப் விட்ட படம் தான் ராதே ஷ்யாம். தெலுங்கில் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பூஜா ஹெக்டேவிற்கும் பிரபாஸுக்கும் கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என சோசியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றினார்கள்.  இப்படம் போட்ட பட்ஜெட்டில் பாதியைக் கூட எடுக்க முடியாமல் திணறியது.

Also Read: 2022 இல் நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட 8 படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ராஜமவுலி

பீஸ்ட்: முதலில் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அதன்பிறகு 10 வருடங்கள் கழித்து தமிழில் 2022 ஆம் ஆண்டு விஜய் உடன் பீஸ்ட் படத்தில் ஜோடி போட்டார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ஓரளவு லாபத்தை மட்டுமே பெற்று தந்தது.

ஆச்சார்யா: தெலுங்கு முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி அவருடைய மகன் ராம்சரண் புலித்தோருடன் காஜல் அகர்வால் பூஜா ஹெக்டே மகேஷ் பாபு இணைந்த நடித்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத படமாக அமைந்தது. இதனால் 140 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் 76 கோடியை மட்டுமே பாக்ஸ் ஆபிஸை பெற்று படு தோல்வி படமாக மாறியது

Also Read: விஜய் பட பாடலால் ஆட்டிடியூட் மாறிய விபரீதம்.. தலைகணத்தில் தலைவிரித்து ஆடும் மாஸ்டர்

சர்க்கஸ்: இந்த ஆண்டு கடைசி படமாக இன்று வெளியான சர்க்கஸ் படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியதுடன், ரிலீஸ் ஆன முதல் நாளே தியேட்டர் எம்டி ஆனதுடன் இந்தப் படத்தை குறித்து நெகட்டிவ் கமெண்ட்கள் சோசியல் மீடியாவில் குவிகிறது. இதில் ரன்வீர் சிங் உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடித்திருந்தார்.

இப்படி ரசிகர்களால் கால் அழகி என வர்ணிக்கப்பட்ட பூஜா ஹெக்டே, இந்த வருடம் கால் வைத்த இடமெல்லாம் அவருக்கு கன்னிவெடியாக மாறியது. மேலும் பெரிய பெரிய பிரபலங்களுடன் பூஜா கிட்டே இணைந்து நடித்த இந்த 4 படங்களும் தோல்வியை தழுவியது. அதனால் பூஜா ஹெக்டேவை தோல்விப்படம் நடிகை என 2022ல் முத்திரை குத்தி விட்டனர்.

Also Read: ரெட் ஜெயண்ட் மூவிஸ் மண்ணை கவ்விய 6 படங்கள்.. ரஜினியால் தூக்கத்தை தொலைத்த உதயநிதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்