Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் சீசன் 4-ல் சூடு பிடித்த குடுமிப்பிடி சண்டை.. அடுத்த வாயாடி வனிதா இந்த மொட்ட பாஸ் தான்
கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பமானது.
மேலும் கொரோனாவின் காரணமாக துவண்டு போயுள்ள விஜய் டிவியின் டிஆர்பியை ஏற்றும் ஒரே பிரம்மாஸ்திரம் இந்த பிக் பாஸ் தான் என்று முடிவு செய்த தொலைக்காட்சி நிறுவனம், சரமாரியாக வெடிகளை இந்த சீசன் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கொளுத்தி போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தினசரி புரோமோகளை வெளியிட்டு பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது விஜய் டிவி. அந்தவகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது புரோமோவைப் பார்த்த அனைவரையும் கண்டிப்பாக இன்றைய நிகழ்ச்சியை பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது.
இந்த வகையில் நேற்று கிச்சனில் ஆரம்பித்த எச்சில் சண்டை இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஏனெனில் அனிதா சம்பத் திற்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் மறுபடியும் வாக்குவாதம் உச்சத்தை தொட்டது.
மேலும் பிக் பாஸ் போன சீசனில் வனிதாவால் தான் டாப் ட்ரெண்டிங் ஆனது. இந்த ஸ்டார்ட்டர்ஜிகாகவே போன சீசனில் வனிதாவை இறக்கியது போல இந்த சீசனில் ஆம்பள வனிதாவாக சுரேஷ் சக்கரவர்த்தியை இறங்கியுள்ளனர் இந்நிகழ்ச்சி குழுவினர்.
இதற்காகவே பிக் பாஸ் குழுவினர் இந்த இரண்டாவது புரோமோவில், ரசிகர்கள் என்ஜாய் பண்ணும் அத்தனை அயிட்டங்களையும் சரமாரியாக இறங்கியுள்ளனர்.
எப்படியோ இந்த வருட பிக்பாஸ் சீசன் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக இருக்கப்போது என பிக்பாஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
