ஷாருக்கான் செய்த செயலால் ஆடிப்போன கமல்.. நட்புன்னா இப்படி தான் இருக்கணும் 

கோலிவுட்டை ஹாலிவுட் ஆக மாற்ற துடிக்கும் ஒரு கலைஞர் என்றால் அது கண்டிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் ஆகத்தான் இருக்கும். அவரின் தேடல் இன்றுவரை முடியவில்லை என்றுதான் கூற வேண்டும் . அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் இவர்.

அப்படி இவரின் வித்தியாசமான முயற்சியில் கடந்த 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளியான படம் தான் ஹேராம். இளையராஜாவின் இசையில் படம் பார்ப்போரை வேறு ஒரு உலகிற்கே கூட்டிச் சென்ற படம். கமல்ஹாசன் ஒரு புதிய முயற்சி எடுக்கப்போகிறார் என்றால் நிச்சயம் அவருடைய கற்பனையை திரையில் காண்பிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் தயாராக இருப்பதில்லை. அதனால் புதிய முயற்சி என்றால் தானே இறங்கி படத்தை தயாரித்து விடுவார். அப்படி இந்தப் படமும் கமலின் சொந்த தயாரிப்பில் உருவான படம்.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான இந்த படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் கமலின் நண்பராக நடித்து இருப்பார். இந்த படம் ஷாருக்கானுக்கு முதல் தமிழ் படமாக அமைந்தது. சுதந்திர போராட்ட சமயத்தில் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து உருவான ஒரு வரலாற்று படமாக இந்த படம் இருந்தது. அந்த சமயத்தில் பல விருதுகளையும் சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றது ஹே ராம் திரைப்படம்.

அந்த சமயத்திலேயே 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஹே ராம். கமல் தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால், கமலின் நெருங்கிய நண்பரான ஷாருக் இந்த படத்தில் நடித்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம். கமல் எப்போதும் கணக்கு விசயத்தில் கராராக இருக்கக் கூடியவர். ஆனால் ஷாருக் கமலுக்காக விட்டு கொடுத்து பெருந்தன்மையாக நடந்து கொண்டார்.

விமர்சன ரீதியாக இந்த படம் சர்வேதச அளவில் பேசப்பட்டாலும், பல விருதுகளை அறுவடை செய்து இருந்தாலும், வசூல் ரீதியாக மக்கள் மனதை எட்டவில்லை. கமலை பொருளாதார ரீதியாக முடக்கிய படங்களில் இதுவும் ஒன்று. வசூலுக்காக எப்போதும் படம் எடுக்காத கமல் இதையும் தனது கனவுப் படங்களின் வரிசையில் ஒன்றாக சேர்த்துக் கொண்டார். அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் தேர்வில் கூட இந்தப் படம் இடம் பெற்றது. ஆனால் இந்த படம் நாமினேசன் ஆகவில்லை.

இப்படிப்பட்ட நேரத்தில் ஷாருக் அவர்கள் செய்த உதவி கமலுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இந்தி விநியோகத்தை ஷாருக் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் மூலம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் இந்த படம் பேசப்படுவதற்கு இதுவும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்