fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் பட ரிமேக்கில் ஷாருக் கான். பாலிவுட் சொல்கிறாரா அட்லீ ? வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.

News | செய்திகள்

தமிழ் பட ரிமேக்கில் ஷாருக் கான். பாலிவுட் சொல்கிறாரா அட்லீ ? வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.

சேப்பாகில் நேற்று முன் தினம் நடந்த போட்டி சமயத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் அருகில் அமர்ந்து அட்லீ மேட்ச் பார்த்தார்.

அருண் குமார் என்கிற அட்லீ மூன்று படங்கள் தான் ரிலீஸ் ஆகியுள்ளது. எனினும் நெக்ஸ்ட் ஜென் இயக்குனர் லிஸ்டில் இணைந்துவிட்டார். ராஜா ராணி, தெறி, மெர்சல் செய்த இயக்குனரின் அடுத்த பட தலைப்பு என்ன என்பதே இங்கு மில்லியன் டாலர் கேள்வி.

தளபதி பட ஷூட்டிங் ஒரு புறம் நடந்து வருகின்றது. ஆனால் மறுபுறமோ பரவும் வதந்திகளும் அதிகம் தான் விஜய்யின் கதாபாத்திரம், படக்கதை, போஸ்டர், தலைப்பு என பல பல தகவல்கள் உலா வருகின்றனர்.

அப்படி பற்ற ஒன்று தான் ஷாருக் கான் விஜய் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது. நம் கோலிவுட்டில் நெருப்பில்லாமல் புகையாதே; அதற்கு ஏற்றார் போல மேட்ச் சமயத்தில் தன் மனைவி பிரியாவுடன் ஷாருக் அருகில் அமர்ந்து மேட்ச் பார்த்தார். நிறைய பேசவும் செய்தனர். மேலும் மேட்ச் முடிந்த பின் அட்லீ ஆபிஸிற்கும் விசிட் அடித்தார் ஷாருக்.

அட்லீ எப்பொழுதும் தன் காதல் மனைவி பிரியா இல்லமால் புதிய ப்ரொஜெக்ட் ஆரம்பித்தது இல்லை. எனவே இது கட்டாயம் புதிய ப்ரொஜெக்ட் தான் என கிசு கிசுகின்றனர் விஷயம் அறிந்தவர்கள். மேலும் ஷாரூக்கின் கடத்த சில படங்கள் லாபம் பெற்று தந்தாலும் மாஸாக ரீச் ஆகவில்லை, எனவே ரிமேக்கில் நடிக்கும் எண்ணத்தில் தான் உள்ளாராம். விக்ரம் வேதா செட் ஆகாமல் போக , தற்பொழுது மெர்சல் படம் மீது அவர் கவனம் சென்றுள்ளது. எனவே தான் இந்த சந்திப்பு என்கின்றனர் கோலிவுட் பட்சிகள் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top