ஷேர் ஆட்டோவில் 24 பேர்.. அள்ளிக்கொண்டு போன ஓட்டுனர்.. கடைசியில் நடந்ததை பாருங்க

விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பல சாலை விதிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், 24 பேர் ஒரு ஆட்டோவில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் புவனகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 24 பேர் திருமண விழாவில் கலந்து கொண்ட பின், இவர்கள் அனைவரும் ஒரே ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளனர். ஷேர் ஆட்டோ என்றால் ஆறு பேர் மற்றும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆட்டோவில் அதிக பேர் பயணம் செல்வதை கண்ட போக்குவரத்து காவலர்கள் அந்த ஆட்டோவை வழிமறித்து பார்த்த பொழுது அதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 24 பேர் பயணம் செய்தது அதிர்ச்சியாக உள்ளது.

கடைசியில் அந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் எச்சரித்து, அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அந்த பயணிகளையும் இது மாதிரி பயணம் செய்யக்கூடாது என்று அறிவுரை சொன்னார். பின்பு அங்கிருந்த இன்னொரு காவலர் இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ ஆனது வைரலாகி வருகிறது.

Leave a Comment