ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ஆசிய மாநாட்டில் பேசிய சிறுவன் ‘ஷரன்’. ப்பா என்ன ஒரு திறமை.தவறாமல் படியுங்கள் தமிழின் அருமை தெரியும்.

இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒரு சிறுவன் 11 வயது ஆன ஷரன் என்ற சிறுவன் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்து. தமிழ் மொழிக்காக kid X என்ற ஆசிய மாநாட்டில் ஹார்வர்டு தமிழ் இருக்கைகள் குறித்து பேசயுள்ளார்.

உலகத்தில் மொத்தம் 7102 மொழிகள் உள்ளன, இந்த மொழிகளில் 7 மொழிகள் மட்டும் கிளாசிகல்(Classical) மொழியாக உள்ளது. அவை தமிழ்(TAMIL), சன்ச்க்ரிட்(SANSKRIT), பெர்சியன்(PERSIAN), லாடின்(LATIN), ஹீர்ப்றேவ்(HEBREW), கிரேக்(GREEK), சைனீஸ்(CHINESE).

ஒரு மொழி கிளாசிகல்(Classical) மொழியாக இருக்கனும் இருக்கணும்ன்னா 11 தகுதிகள் தேவை அவை அனைத்தும் தமிழ் மொழிக்கு உண்டு.

அவை என்ன:

பழமை, தனித்துவம், பொதுகுனம், நடுநிலைமை, பெற்றோர் உறவை போற்றுதல், கலாச்சாரம் மற்றும் கலைகள், மொழி சுதந்திரம், எழுத்து வலிமை, இலக்கிய கட்டைமைப்பு, சிந்தனை வலிமை, மொழியின் கொள்கை.
(Antiquity,individuality,Common characters,Neutrality, Parental kinship, Culture art, Indepandence, literary prowess, Noble ideas and ideals, Originality, Linguistics principales.)

ஹார்வர்டு யுனிவர்சிட்டில தமிழ் இருக்கை அமைக்க 39 கோடி தேவைப்படுது.
இது வரைக்கும் 34 கோடி வசூல் ஆனது. இன்னும் 4 கோடி தேவைபடுகிறது என்று கூறிவுள்ளார். 380-வருட பழமையான ஹார்வர்டு யுனிவர்சிட்டில 6 மொழிக்கு இருக்கைகள் உள்ளன. தமிழுக்கு இருக்கைகள் அமைத்தாள் அதனோட மதிப்பும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த இருக்கைகள் அமைப்பதின் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் தமிழை ஒரு துறையாக தேர்வு செய்து அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு கொண்டு செல்லும்.

நிதிஉதவி :

நடிகர் சங்க தலைவர் விஷால்  ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்காக,  10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். அதேபோல் ஹார்வர்டு பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கைக்காக, ஏ.ஆர்.ரஹ்மானும் 25 ஆயிரம் டாலர் அளித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக விஷால் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். தமிழ் இருக்கைக் குறித்து

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள். எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன்.

தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

தவறாமல் வீடியோ பாருங்கள்:

KIDx ஆசியா மாநாட்டில் பேசிய சிறுவன் சமீபத்தில் தந்தி டிவில் பேசியது.