fbpx
Connect with us

பாட்டு பாடிய ஷாந்தனுவின் வீடியோ.. செல்லமாய் கலாய்த்த மிர்ச்சி சிவா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாட்டு பாடிய ஷாந்தனுவின் வீடியோ.. செல்லமாய் கலாய்த்த மிர்ச்சி சிவா

நடிப்பு, நடனம், ஸ்டண்ட் என அனைத்தும் கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தனு பாக்கியராஜ். நல்ல பிரேக் த்ரூவிற்காக வைட்டிங். வரிசையாக இந்த 2020 இல் பல நல்ல ப்ரொஜெக்ட்டுகள் கை வசம் உள்ளது. மதயானைக்கூட்டம் இயக்குனர் சுகுமாருடன் ‘இராவண கோட்டம்’. சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசட தபர’; மணிரத்தினம் தயாரிப்பில் “வானம் கொட்டட்டும்”, தளபதி விஜயுடன் மாஸ்டர் என மனிதர் சினிமா கிராப் அடுத்த லெவல் நோக்கி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பிரபல டிவியில் குழைந்தைகள் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் அனிருத் இசையில் சிவா –  பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை பட பாடலையும் பாடினார். அதனை பகிர்ந்து, சிவா அவர்களையும் டேக் செய்தார்.

சிவா வழக்கம் போல தன்னுடைய பாணியில் பாட்டெல்லாம் ஓகே நல்லா பாடிருக்கே மச்சான் , டான்ஸ் டிப்ஸ் வேண்டுமென்றால் தயக்கம் இல்லாமல் எனக்கு போன் பண்ணு என கிண்டல் செய்துள்ளார்.

இத்துடன் முடிக்கவில்லை சிவா, ரசிகர் ஒருவர் இவரின் பட பாடல் வீடியோவை, ஷேர் செய்ய.. சிவா நானும் போட்டியில் கலந்துக்கபோறேன் என சொல்ல , ஷாந்தனு பின் வருமாறு ட்வீட் செய்தார் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top