Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் இல்லன்னா மாஸ்டர் படம் இல்லை.. கெத்து காட்டும் சாந்தனு
முருங்கைக்காயை வைத்து பிரபலமான பாக்கியராஜின் மகன் சாந்தனு மிகப்பெரிய டான்சர் என்றே கூறலாம். குழந்தை நட்சத்திரமாக வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் நடித்த சாந்தனு, சர்க்கரைகட்டி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
போதுமான வரவேற்பு இல்லை என்றாலும் தமிழ்சினிமாவில் தன்னை ஒரு சிறந்த நடன இயக்குனராக வெளிப்படுத்தி வருகிறார். சாந்தனு தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது திருமணத்தை கூட விஜய் தலைமையில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சமீபத்தில் சன் மியூசிக்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாரசியமான சில சம்பவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தங்கள் காதலுக்கு பஞ்சாயத்து பண்ணி வைத்ததாக அவர் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாமல் நான் சினிமாவில் அடிக்கு மேல் அடி வாங்கி தற்போது ஒரு நிலையான இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்க இருந்தாராம்.
ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் கைவசம் 4 படங்கள் வெளிவர காத்துக்கொண்டிருக்கின்றன.
வானம் கொட்டட்டும், கசடதபற, ராவண கூட்டம் ஆகிய படத்தில் நடித்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இதைப்பற்றி அவர் கூறுகையில் நான் இல்லை என்றால் மாஸ்டர் கதை இல்லை என்று கெத்தாக கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதை படக்குழு கேட்டாங்கன்னா மண்டையில் கொட்டு வைப்பாங்கனு அவருக்கு தெரியுமா தெரியலையா!
