சாந்தனு தீவர விஜய் ரசிகர். தளபதியின் உடன் பிறவா தம்பி சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி நம் கோடம்பாக்கம் அறிந்த விஷயம் தான்.

இவர் தீபாவளியன்று கோயம்பேடு ரோஹிணியில் காலை 10.30 மணிக்கு மெர்சல் படத்தை தளபதியின் ரசிகர்களுடன் தானும் சேர்ந்து பார்க்க வருவதாக தன் ட்விட்டரில் கூறினார்.

சொன்னது போலவே வந்து படமும் பார்த்தார்.

#ShanthanuBakiyaraj watching #Mersal at #Koyambedu #RohiniSilverScreen

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

 

படம் பார்த்துவிட்டு “என்னையும் அறியாமல் என் தொண்டை கிழிய கத்தினேன். மாஸ் மற்றும் க்ளாஸ் தளபதி கதாபாத்திரம். கூஸ் பம்ப்ஸ்” என்று ட்வீட் போட்டார்

mersal

எஸ்.ஜே.சூர்யா பற்றி அவர் சொன்னது “உங்களையுடைய லுக் மற்றும் பெர்பாமன்ஸ் சூப்பர். ஸ்பைடர் ரில் நீங்க வேற விதமா தெரியிறீங்க.”

தியேட்டர் நன்றாக இருந்ததா? என்று ரோகினி சில்வர் சகிரீன்ஸ் சார்பில் அவர்கள் கேட்க: ” ஆமாம். மிக நன்றாக இருந்தது. ரசிகர்களை அவர்கள் ஸ்டைலில் கொண்டாடட விட்டது, பிடித்தது”

மனிதர் துளியும் பந்தா இல்லாமல் ரசிகர்களில் ஒருவராக தான் படம் பார்த்தார்.

இந்த நேரத்தில் தான் ஒருவர் ‘ஹலோ விஜய் ப்ராண்ட் அம்பாசடுர், நல்லா மார்க்கெட் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.’ என்று விஷமமான டீவீட்டை தட்டி விட்டார்.

அதற்கு துளியும் ஈகோ பார்க்காமல், டென்ஷனும் ஆகாமல், மிக குலாக “நண்பா விஜய் அண்ணாவுக்கு பிராண்ட் அம்பாசுடரா இருக்க நான் பெருமை படறேன்.” என்று பதில் அளித்தார்.

இதனை பலரும் ரீ ட்வீட் செய்தனர்.

இந்த பதிலை பார்த்ததும் அந்த நபர் “ஜி நீங்க எனக்கு ரிப்ளை பண்ணினது ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க மனசு கஷ்டப் பட்டிருந்தா, நான் மன்னிப்பு கேட்டுக்குரேன், சாரி அண்ணா.” என்று பதில்தந்தார்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: கண்டிப்பா விஜய் அண்ணாவுடன் சேர்ந்து ஒரு படம் பண்ணுங்க ப்ரோ. வி ஆர் வைட்டிங்.