தளபதியின் உடன் பிறவா தம்பியான சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி நம் கோடம்பாக்கம் அறிந்த விஷயம் தான்.

சாந்தனுவின் திருமணத்தில் கூட அனைத்து சம்பிரதாயங்களும் முடியும் வரை இருந்து தான் சென்றார் விஜய் . பின்னர் புதுமண தம்பதிகளான சாந்தனு-கீர்த்தியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து, தடபுடலாக கவனித்தார். சாந்தனு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்.

சாந்தனு தீவர விஜய் ரசிகர். எந்த விழா, நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தளபதி பற்றி இவரிடம் கண்டிப்பாக இரண்டு கேள்வியாவது கேட்ப்பார்கள். இவரும் துளியும் ஈகோ இல்லாமல் அதற்க்கு பதில் சொல்வார்.
நேற்று இரவு தன் ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் படம் பற்றி இந்த டீவீட்டை அப்டேட் செய்தார் சந்தனு.

அட ஆமாங்க இவர் கோயம்பேடு ரோஹிணியில் தான் இன்று காலை 10.30 மணிக்கு படத்தை பார்க்க வர்றார். விஜய் அண்ணாவின் ரசிகர்களுடன் இவரும் மெர்சல் தீபாவளி கொண்டாடப் போகிறார்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: இந்த தீபாவளி மெர்சல் தீபாவளி, தளபதி தீபாவளி … என்ன மெர்சல் பண்ணலாமா ?