வெறுப்பேற்றிய ரசிகரை, பருத்தி வீரன் ஸ்டைலில் கலாய்த்த சாந்தனு பாக்யராஜ்.

தளபதியின் உடன் பிறவா தம்பியான சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி நம் கோடம்பாக்கம் அறிந்த விஷயம் தான்.

சாந்தனுவின் திருமணத்தில் கூட அனைத்து சம்பிரதாயங்களும் முடியும் வரை இருந்து தான் சென்றார் விஜய் . பின்னர் புதுமண தம்பதிகளான சாந்தனு-கீர்த்தியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து, தடபுடலாக கவனித்தார். சாந்தனு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார்.

சாந்தனு தீவர விஜய் ரசிகர். எந்த விழா, நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தளபதி பற்றி இவரிடம் கண்டிப்பாக இரண்டு கேள்வியாவது கேட்ப்பார்கள். இவரும் துளியும் ஈகோ இல்லாமல் அதற்க்கு பதில் சொல்வார்.

சாந்தனு  தீபாவளியன்று கோயம்பேடு ரோஹிணியில் காலை காட்சி யில்   மெர்சல் படத்தை தளபதியின் ரசிகர்களுடன் தானும் சேர்ந்து பார்த்தார் என்பது நாம் அறிந்த விஷயமே.

mersal

இந்நிலையில் மெர்சல் 50 வது நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது. சாந்தனு கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி இப்படத்தினை மீண்டும் ரசிகர்களுடன் பார்த்தார். தன் ட்விட்டரில்..

“இப்படி தான் விஜய் அண்ணாவின் படத்தை பார்க்கவேண்டும். மிக சிறந்த அனுபவம். அவரது எனர்ஜி, சாரம் மற்றும் மெஜிக்க்கை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது. வாழ்த்துக்கள்.” என்று ட்வீட் போட்டார்.

அப்பொழுது ஒருவர் சாந்தனுவுக்கு அறிவுரை சொல்லும் விதமாக ட்வீட் போட்டார் ” இப்படியே அடுத்தவங்களை பத்தி பேசறதை விட்டுட்டு, அடுத்த படமாவது நல்ல படமா நடிங்க பார்க்கலாம்.” என்றார்.

அதற்கு துளியும் ஈகோ பார்க்காமல், பதில் தந்தார் சந்தனு  ..

” சரியாய் சொன்னீங்க பிரதர். இல்லைன்னா கண்டவன் எல்லாம் கேள்வி கேக்குறான் !” என்று பதில் ட்வீட் போட்டார்.

சினிமா என்ற பொது மேடைக்கு வந்து விட்டால் பல திசைகளில் இருந்து வரும் பல விஷயங்களையும் சந்திக்கின்ற சூழல் வந்து விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்

“மனிதர்  நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனி உண்டோ?”

Comments

comments

More Cinema News: