Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ்

தளபதியின் உடன் பிறவா தம்பியான சாந்தனு என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கம் பற்றி நம் கோடம்பாக்கம் அறிந்த விஷயம் தான். சாந்தனுவின் திருமணத்தில் கூட அனைத்து சம்பிரதாயங்களும் முடியும் வரை இருந்து தான் சென்றார் விஜய் . பின்னர் புதுமண தம்பதிகளான சாந்தனு-கீர்த்தியை தன் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்து, தடபுடலாக கவனித்தார். இந்த ஜோடிக்கு எப்பொழுதுமே விஜய் ஸ்பெஷல் தான்.
விஜய் படத்தின் போஸ்டர், டீஸர், பட ரிலீஸில் fdfs என அசத்துபவர் சாந்தனு.
இந்நிலையில் தன் மனைவியின் பிறந்தநாள் மற்றும் காதலை தினத்தை முன்னிட்டு ட்ரிப் சென்றுள்ளார் இவர்.
அந்த ட்ரிப் முடிந்து வரும் பொழுது இவர் பதிவிட்ட ஸ்டேட்டஸ் தான் 10000 லைக்குகள் மற்றும் 2000 ரி ட்வீட் கடந்து ட்ரெண்டிங் ஆனது.
“சுற்றுலாவை முடித்து திரும்பும் சமயத்தில் விமானத்தினுள், பார்க்க ஏற்ற படம். மெர்சல். தளபதியின் என்ட்ரி, இரவு முழுவதும் முழித்த இருந்தேன். அசத்தல் தருணங்கள் படம் நெடுகிலும். நாளை முதல் மீண்டும் ஷூட்டிங்கில் இணைகிறேன்.” என்பதே அந்த ஸ்டேட்டஸ்.
