Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்பா vs அண்ணன் ? சர்கார் கதை சர்ச்சை. சாந்தனு பாக்கியராஜ் யார் பக்கம் தெரியுமா ?
சர்கார்
சர்கார் படத்தின் பிரச்சினை ஒருவழியாக முடிந்தது என்றே சொல்லவேண்டும். ஒரு பக்கம் முருகதாஸ், மறுபக்கம் வருண் ராஜேந்திரன். நியாயத்திற்காக பாக்கியராஜ், கார்ப்பரேட் மூளையுடன் சன் பிக்ச்சர்ஸ் என்று நான்கு முனை போட்டியாக இருந்த பிரச்சனை நேற்றோடு முடிந்தது.
பிரச்னையை தீர்த்து வைக்க முழு பட கதையையும் சொல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டார் பாக்கியராஜ். விஜய் ரசிகர்கள் பலர் இதனால் கடுப்பாகினார். இதன் விளைவாக சாந்தனு பாக்கியராஜின் மகனிடம் பலர் ட்விட்டரில் சரமாரியாக கேள்வி கேட்டனர், சிலர் திட்டவும் செய்தனர்.

Shanthanu Bhagyaraj
இந்நிலையில் சாந்தனு தன் ட்விட்டரில் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் ஒன்றை தட்டியுள்ளார். அதில் விஜய் மற்றும் தன் தந்தை இருவரையும் விட்டுக்கொடுக்காமல் போட்ட ஸ்டேட்டஸ் பலரின் பாராட்டை பெற்று வருகின்றது.
தளபதியின் சகோதரனாய் இருப்பதும் பெருமை
இந்தத் ‘தந்தைக்கு’
மகனாய் இருப்பது
எனக்கு பெருமை!
Waiting for #SarkarDiwali @actorvijay #KBhagyaraj pic.twitter.com/q3kCSCSSWU— Shanthnu Buddy (@imKBRshanthnu) October 30, 2018
