Connect with us
Cinemapettai

Cinemapettai

shanthanu

Entertainment | பொழுதுபோக்கு

நானும் ரவுடி தான் பட வசனத்தை டிக் டோக் செய்த சாந்தனு – கிகி விஜய் ஜோடி. கீர்த்திக்கு ஆதரவாக குவியுது லைக்ஸ் கமெண்ட்.

நானும் ரவுடி தான் படத்தில் வரும் நயன்தாராவுக்கு கிகி விஜய்யும், பாலாஜியின் குரலுக்கு சாந்தனுவும் நடித்துள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

 பாக்யராஜ் மகன் சாந்தனு  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து  முயற்சி செய்து வருகிறார். இவர் விஜே துறையில் பிரபலமாக இருக்கும்  கிகி எனச் செல்லமாக அழைக்கப்படும் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதால் அவ்வப்போது ஏதாவது ஒரு வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் . ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள். இந்நிலையில் நானும் ரவுடி தான் பட வசனத்தை நடித்து இவர்கள் டிக் டோக் விடியோவாக வெளியிட்டனர். தன் ட்விட்டரிலும் சாந்தனு அதனை பதிவு செய்தார்.

இந்த விடியோவை பார்த்துவிட்டு பலரும் எங்கள் தங்கம் பேசுவதை கேக்க காத்திருக்கிறோம் எனவும், இந்த வாய்ஸ் தானே தலைவா உன்னை மயக்கியது எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர். இவர் மனைவியும் இத்தகைய ஒரு கமெண்டுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top