Shanthanu Bhagyaraj Sibiraj

தளபதியின் தம்பிகள்

தன் படத்தில் தல / தளபதி ரெபெரென்ஸ் வைத்தால் ரசிகர்களை கவர உதவுமா என்று யோசிக்கும் நபர்கள் தான் சினிமாவில் அதிகம். எனினும் அந்த வகையில் தளபதி விஜயின் ரசிகரக்ள் என்று சொல்வதை காட்டிலும் தம்பிகள் என நாம் குறிப்பிடும் வகையிலும் சிலர் உள்ளனர். ஜி வி பிரகாஷ் குமார், சாந்தனு பாக்கியராஜ், சிபிராஜ் அதில் அடக்கம்.

சாந்தனு

sarkar-bhagyaraj-vijay
sarkar-bhagyaraj-vijay

பட கதை சர்ச்சை விவகாரத்தில் பலரின் கடுப்பு, எதிர்ப்பு, சீண்டுதல் என பலவற்றிற்கு ஆளானார் சந்தனு. எப்பொழுதும் விஜய் படத்தை ரோகினி சினிமாஸில் காலை ஷோ பார்ப்பவர், இம்முறை ஆஜர் ஆகவில்லை.

இந்நிலையில் சாந்தனு சிபிராஜுடன் இணைந்து சத்யம் சினிமாஸில் படம் பார்த்துள்ளார். பட பார்த்துவிட்டு இவர்கள் பதிவிட்ட ட்வீட் நல்ல ரீச் ஆகியுள்ளது.

“தளபதி மீண்டும் செய்து விட்டார். அவர் தோற்றம், வசன உச்சரிப்பு,எமோஷன் மற்றும் ஸ்டைலால் நம்மை மயக்கி விட்டார். அரசியல் படத்தை பொழுதுபோக்கு அம்சத்தையும் கலந்து கொடுத்த முருகதாஸ் சாருக்கு வாழ்த்துக்கள். சிறப்பான தீபாவளி பரிசு.” என்று சிபி பதிவிட்டார்.

“தற்பொழுது உள்ள சூழலுடன் ஒருமித்து செல்கிறது, விஜய் அண்ணா அழுத்தமான கருத்தை சொல்கிறார். என்ன சுகிறீன் தோற்றம்.” என்று சிலாகித்துள்ளார் சாந்தனு.