Videos | வீடியோக்கள்
சித் ஸ்ரீராம் குரலில் மனதை வருடும் ஏதோ சொல்ல பாடல்.. சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் சிங்கிள் பாடல் வீடியோ
தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலர் முன்னணி நடிகர்களாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சாந்தனுவுக்கும் அந்த ஆசை வந்ததில் தவறு இல்லை.
இந்திய சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரான பாக்யராஜ் மகன் சாந்தனு. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியதும் பாக்யராஜின் இயக்கத்தில் சித்து +2 எனும் படத்தில் தான்.
ஆனால் அந்தப் படம் அட்டர் ஃப்ளாப். அதற்கு முன்னரே சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் ஜெய் கதாபாத்திரம் அவருக்கு தான் கிடைத்ததாம். அப்போது அப்பா பேச்சைக் கேட்டுக் கொண்டு நடித்தால் மாஸ் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என மண்ணை கவ்வினார்.
அதன்பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் தற்போது வரை வாய்ப்பு இல்லை. ரசிகர்கள் மத்தியில் எப்படியாவது வரவேற்ப்பை பெற்று விட வேண்டும் என விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அடுத்ததாக சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படத்திலிருந்து தரண் இசையில் ஏதோ சொல்ல எனும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
பாடல் லிரிக் விடியோ:-
