நடிகர் சாந்தனு பாக்யராஜ், இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் இவருக்கும் விஜய்க்குமான உறவை பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ” நான் அவரிடம் பல விஷயங்களை சகஜமாக பேசுவேன். அவர் படம் சரியில்லை என்றால் ‘என்ன அண்ணா இப்படியாச்சு’ன்னு கேட்பேன். அவரும் ‘அட விடுப்பா நானே வெளிய தலைக்காட்ட முடியாம இருக்கேன்’னு ஜாலியா பதில் சொல்வார். அதேபோல் என் மீதுள்ள தவறையும் அவர் சுட்டிக்காட்டுவார். எங்களுக்குள் நல்ல புரிதல் உண்டு. அதேபோல் எனக்கான எல்லையும் எனக்கு தெரியும்” என்றார்.