Connect with us
Cinemapettai

Cinemapettai

பட வாய்ப்பு இல்லாததால் புது யுக்தியை கையில் எடுத்த பிரபல வாரிசு நடிகர்! அப்பா தான் பெரிய இயக்குனராச்சே!

shanthanu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பட வாய்ப்பு இல்லாததால் புது யுக்தியை கையில் எடுத்த பிரபல வாரிசு நடிகர்! அப்பா தான் பெரிய இயக்குனராச்சே!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் பட வாய்ப்புகள் கிடைக்காததால் ரசிகர்களுக்கு தங்களுடைய முகம் மறந்து விடக்கூடாது என்பதற்காக பல டிஜிட்டல் வழிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில்தான் சிலர் யூடியூப் சேனல் ஆரம்பிப்பது, சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை பதிவிடுவது, மியூசிக் ஆல்பம் செய்வது போன்றவற்றை செய்து அவ்வப்போது ரசிகர்களிடையே பிரபலம் ஆகின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனரான பாக்யராஜின் மகன் சாந்தனு புதிய மியூசிக் ஆல்பம் ஒன்றை வெளியிடப் போகிறாராம். அதனுடைய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ஒரு காலத்தில் தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் தான் இயக்குனர் பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு சில படங்களில் கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

மேலும் சாந்தனுவின் மனைவியான கீர்த்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். ஏற்கனவே இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதை நடத்தி  கொண்டிருக்கின்றனர்.

தற்போது சாந்தனுவும் கீர்த்தியும் இணைந்து பிரபல நடன இயக்குனரான பிருந்தாவின் இயக்கத்தில் புதிய மியூசிக் ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு ‘எங்க போற டி’ என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

shanthanu-album

shanthanu-album

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top