fbpx
Connect with us

Cinemapettai

ஷங்கரின் சமீபத்திய பாராட்டு! யாருக்கு?எதுக்கு தெரியுமா?..

News | செய்திகள்

ஷங்கரின் சமீபத்திய பாராட்டு! யாருக்கு?எதுக்கு தெரியுமா?..

இயக்குனர் ஷங்கர் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் இவரை பிரமாண்ட இயக்குனர் என்றும் சொல்லலாம்  இவர் எடுக்கும் படங்களும் பிரமாண்டமாய் இருக்கும். தற்பொழுது இவர் ரஜினியை வைத்தது 2.0 இயக்கிகொண்டிருக்கிறார்.

2.0 படப்பிடிப்பு முடிந்து அனிமேஷன் வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார் ஷங்கர். இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் ஷங்கர் எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றதோ அந்த நேரத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களையும் பார்ப்பார்.அப்படித்தான் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் துப்பறிவாளன் படத்தை பார்த்துள்ளார்.

படத்தை பார்த்த அடுத்த சில மணி நேரங்களிலேயே தன் டுவிட்டர் பக்கத்தில் ஷங்கர் ‘துப்பறிவாளன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது, படக்குழுவினர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top