Connect with us
Cinemapettai

Cinemapettai

ஷங்கரின் பிரமாண்டம் 24-ஆம் புலிகேசியிலும் தொடருது-அவை என்னான்னு பார்ப்போமா..!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷங்கரின் பிரமாண்டம் 24-ஆம் புலிகேசியிலும் தொடருது-அவை என்னான்னு பார்ப்போமா..!!

வடிவேலு நடித்த 23ஆம் புலிகேசி மாபெரும் வெற்றியை தேடிகொடுத்தது வடிவேலுக்கு சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது.

இந்த படத்திற்காக சென்னையை அடுத்து பூந்தமல்லியில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தில் டூயட் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. அதில் வடிவேலு, பார்வதி ஓமணக்குட்டன் மற்றும் நூற்றுக்கணக்கான நடன மங்கைகளும் நடித்தனர்.

இந்த நிலையில், தற்போது அப்படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்படுகிறது. மேலும், இந்த படத்திலும் வடிவேலு இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வடிவேலு இளவட்டமாக ஸ்லிம் கெட்டப்பில் நடிக்கிறாராம். மேலும், முதல் பாகத்தை விடவும் இரண்டாவது பாகத்தில் நிறைய புதுமைகள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் சிம்புதேவன், டைரக்டர் ஷங்கர் படங்களில் வருவது போன்ற கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் கையாளப்போகிறாராம்.

குறிப்பாக மாயமந்திர ஜால வித்தைகள் கொண்ட ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளதாம். அந்த பாடலின் பெரும்பகுதி கிராபிக்ஸ் கொண்டு தான் உருவாக்கப்படுகிறதாம். ஆக, இம்சை அரசன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக இருக்கும் என்கிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top