சோதிக்கும் கமல்.. செம கடுப்பில் சங்கர்.. நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்களை சோதிக்கும் ஆளாக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். லைகா நிறுவனம் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2.

இந்தியன்2 படம் ஆரம்பத்திலிருந்தே பல விதமான சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து கொண்டே இருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடத்துக்குமேல் ஆன நிலையிலும் இன்னும் முடிந்தபாடில்லை.

அதற்கு தகுந்தார்போல் இடையில் படப்பிடிப்பு தளத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவமும் படத்தை பல்வேறு விதமாக பாதித்து விட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தியன் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்தார் சங்கர்.

செப்டம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்க இருந்த நிலையில் திடீரென கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

கிட்டத்தட்ட 100 நாட்கள் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் குறைந்தது 20 முதல் 30 நாட்களாவது கால்ஷீட் தர வேண்டியது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சட்டமன்ற தேர்தலுக்கு கமல்ஹாசன் தயாராக வேண்டி வரும். இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க அரசியல் தான் பேசப் போகிறார் என்பது தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இந்தியன் படத்தையும் முடிக்க முடியாமல் வேறு எந்த படத்திலும் கமிட் ஆக முடியாமல் செம கடுப்பில் இருக்கிறாராம் சங்கர். இதற்கிடையில் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இடமும் ஒரு அரசியல் கதை கேட்டுள்ளாராம்.

மொத்தத்தில் என் பொழப்புக்கு வேட்டு வைத்து விட்டார் என கமல்ஹாசன் மீது அதிருப்தியில் உள்ளார் சங்கர். கமலஹாசனும் தற்போது விரைந்து படப்பிடிப்பை முடிக்க முடிந்தால் கால்ஷீட் தருகிறேன் என்பதைப்போல கூறியுள்ளாராம்.