சமீபகாலமாக அனிருத் வருவது நடவடிக்கை எதுவும் சங்கருக்கு பிடிக்காததால் தான் அவரை புதிதாக இயக்க இருந்த ராம்சரன் படத்திலிருந்து கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் இசையமைப்பாளர்களில் முக்கிய இடம் பிடிப்பவர் அனிருத் தான். சம்பளமும் தற்போதைக்கு அவருக்கு தான் அதிகம். ஏ ஆர் ரகுமானை விட அதிக சம்பளமாம்.
அடுத்ததாக அனிருத் இசையமைப்பில் தளபதி65, டாக்டர், டான், D44 போன்ற படங்கள் கைவசம் உள்ளன. இதற்கு முன்னதாக அனிருத் இசையமைப்பதாக இருந்த சீயான்60 படத்திலிருந்து அனிருத்தை கழட்டிவிட்டு கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி சேர்ந்தார்.
அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பணியாற்றி வந்த அனிருத்தை திடீரென நீக்கி விட்டு பழையபடி ஏஆர் ரகுமானை உள்ளே கொண்டு வந்து விட்டாராம் ஷங்கர்.
அதற்கு காரணம் அனிருத்திடம் சங்கர் இசையிலும் காட்சியிலும் ஏதாவது மாற்றம் வேண்டும் என்று நினைத்து அனிருத்துக்கு போன் செய்யும் போது போனை எடுப்பதே இல்லையாம். மெசேஜ், ஈமெயில் என எது அனுப்பினாலும், இன்று அனுப்பினால் நாளைக்கு தான் ரிப்ளை வருகிறதாம்.
இதனால் கடுப்பான சங்கர், உன் சங்காத்தமே வேண்டாம் என பாதி இசையமைத்திருந்தாலும் பரவாயில்லை என இந்தியன் 2 படத்திலிருந்து நீக்கி விட்டாராம். இதேபோல்தான் சங்கர் ராம் சரண் இணையும் படத்தில் முதலில் தயாரிப்பாளர் அனிருத்தை போடலாம் என கேட்டதற்கு, ஏ ஆர் ரகுமான் தான் சரியாக இருக்கும் என ஷங்கர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களை தொடர்ந்து பகைத்துக் கொண்டே வருகிறார் அனிருத். போகிற போக்கை பார்த்தால் சிவகார்த்திகேயன் தனுஷ் தவிர வேறு யாரும் பட வாய்ப்பு தரமாட்டார்கள் போல.