இந்தியன்-2 பஞ்சாயத்திற்கு ஒரு முடிவுகட்டப்படாமலேயே ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஜூன் மாதம் தொடங்கும் என தெரிகிறது. சங்கர் தன்னுடைய ஆரம்ப கட்ட படப்பிடிப்புக்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாக அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
ஷங்கருக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் இடையில் தொடர்ந்து பஞ்சாயத்துகள் எழுந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த மொழிகளில் படம் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்தவகையில் தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ என்பவர் தயாரிக்கும் ராம்சரண் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் அரசியல் சாயலில் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சங்கரிடம் ராம்சரண் நடிகையை பரிந்துரை செய்ததாக தெரிகிறது. அவர் வேறு யாரும் இல்ல நம்ம ஆலியா பட் தான். சமீபத்தில்தான் ராம்சரண் மற்றும் ஆலியா பட் கூட்டணியில் ராஜமவுலி இயக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் இவர்களின் ஜோடி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதே நடிகையுடன் அடுத்த படத்திலும் நடித்தால் தன்னுடைய பாலிவுட் மார்க்கெட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பது கருதி ராம்சரண் ஷங்கரிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளாராம். ஆனால் ஷங்கர் மனதில் கியாரா அத்வானி இருப்பதாக தெரிகிறது. இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.