Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டும் சங்கர்.. வசூல் மழை பொழிந்த படத்தின் பார்ட்-2 உறுதி

தமிழ் சினிமாவில் நம்பர்-1 இயக்குனராக வலம் வருபவர் சங்கர். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை குவித்தது.

அந்தவகையில் ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், சிவாஜி நண்பன் போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தியன் 2 படம் எடுப்பதில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் படம் இயக்குவது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு விதமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சங்கர். அந்த வகையில் காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்கள் அடங்கும்.

ஷங்கர் தயாரிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ஈரம். ஆதி நடித்திருந்த இந்தப் படம் திகில் கலந்த பேய் கதையாக உருவாகியது. இதில் இறந்த ஒரு பெண்ணின் ஆவி நீர் மூலமாக பழிவாங்கும் படலத்தை கொண்டதாக அமைந்தது இந்த படத்தின் கதை.

இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை எழுதி இயக்கி இருந்தார் அறிவழகன். தற்போது ஊரடங்கு காலத்தில் ஈரம் 2 படத்திற்கான கதையை எழுதி முடித்து விட்டதாகவும், சங்கர் தயாரித்தால் மட்டுமே இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அனேகமாக ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு இந்த படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top