எல்லாருக்கும் எதிர்பார்த்த ஷங்கரின் அடுத்த படம் தெரியுமா? அதை தயாரிப்பதும் யார் தெரியுமா? - Cinemapettai
Connect with us

Cinemapettai

எல்லாருக்கும் எதிர்பார்த்த ஷங்கரின் அடுத்த படம் தெரியுமா? அதை தயாரிப்பதும் யார் தெரியுமா?

News | செய்திகள்

எல்லாருக்கும் எதிர்பார்த்த ஷங்கரின் அடுத்த படம் தெரியுமா? அதை தயாரிப்பதும் யார் தெரியுமா?

ஷங்கர் என்ன செய்கின்றார் என்பதை தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமாவே உற்று கவனிக்கும். அந்த வகையில் இவர் தற்போது 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தில் மூன்று வேடத்தில் ரஜினி நடித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 300 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சென்னையில் பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து, அதனுள் பல முக்கிய காட்சிகளை காட்சிப்படுத்தி இருக்கிறார் ஷங்கர். இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசீகரன், சிட்டி ஆகிய கதாபாத்திரங்களைத் தொடர்ந்து மற்றொரு வில்லன் கதாபாத்திரத்திலும் ரஜினி நடித்திருக்கிறார். ‘எந்திரன்’ படத்தில் இறந்த வில்லனின் மகனாக சுதன்ஷூ பாண்டே நடித்திருக்கிறார். அவரிடம் தீமையான சிட்டி ரோபோவின் CODE-களை வைத்து புதிதாக ஒரு ரோபோவை உருவாக்கிறார்.

 

அக்‌ஷய்குமாரும் இப்படத்தில் ஒரு தீய விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். அவருடைய பாத்திர படைப்பு ரசிகர்களுக்கு புதிதாக இருக்குமாம். பெரிய வடிவிலான அனிமேட்ரானிக்ஸ் பறவைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அக்‌ஷய்குமாருடன் இடம்பெற்று இருக்கிறது. படத்தின் இறுதிகாட்சியில் பெரும் ராணுவ டாங்கிகள் இடம்பெறுவது போன்று பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.

தீமையான சிட்டி மற்றும் அக்‌ஷய்குமார் இருவரையும் ரஜினி தான் உருவாக்கி இருக்கும் நல்ல ரோபோவை வைத்து எப்படி அழிக்கிறார் என்பதைத் தான் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார் ஷங்கர்.

மேலும், இப்படத்தில் ஒரு பாடல் மட்டுமே இடம்பெற இருக்கிறது. ஆனால், படத்தின் ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற இருக்கிறது.

இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் அஜித், கமல் இருவரில் யாருடனாவது பணியாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் அமைந்தது ஷங்கர்-கமல் கூட்டணி,இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி  இணைய உள்ளது,  இப்படம் இந்தியன் இரண்டாம் பாகமாக எடுக்கவுள்ளார்களாம்.

மேலும், இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top