Tamil Cinema News | சினிமா செய்திகள்
விண்வெளிக்கு செல்லும் ஷங்கர்! பிரமாண்ட திட்டம்
ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் 2.0 படம் வெளிவர இருக்கிறது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக இருக்கிறார் இந்த படத்தை தொடர்ந்து இந்தியன் பார்ட் 2 படத்தை இயக்க இருக்கிறார் இதற்கான திரைக்கதை பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. கமலின் பிக் பாஸ் நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது அதனால் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கிறார்கள்.

Shankar ARR
சரி இந்தியன் 2 முடித்த பின்னர் அடுத்த படம் என்ன?. ஷங்கர் இயக்குவதாக இருந்தால் பாலிவுட் நடிகர் நடிகைகள் கூட தங்கள் கால்ஷீட்டை வாரி இறைக்க தயாராக உள்ளனர், பணத்தை இறைக்க தயாரிப்பளர்களும் தயாராக உள்ளனர் ஆனால் ஷங்கரின் முடிவு என்னவாக இருக்கும். ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சங்கர்;
என்னுடைய அடுத்தப் படமும் எந்திரன் படம் மிக பிரமாண்டமாக இருக்கும் இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் அல்லது விண்வெளி படமாக இருக்கும் என கூறினார். ஆனால் இந்த படத்தில் நடிக்கப்போவது யார் யார் என்று தெரியவில்லை விஜய் விக்ரம் என முன்னணி நடிகர்கள் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் என கூறுகின்றனர்.
