பட்ஜெட்டை குறைத்தும் மதிக்காத லைக்கா.. கடுப்பில் இயக்குனர் ஷங்கர்

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் 2019ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஹைதராபாத் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டது.

அதன்பிறகு 2020ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு உயிரிழந்தவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கப்பட்டது. இதனால் சில காலம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்தனர். இந்நிலையில் ஷங்கர் ராம் சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் இப்படத்தின் வேலையில் மும்முரமாக இருந்தார் ஷங்கர். இந்நிலையில் இந்தியன் 2 படவேலைகள் எப்போது ஆரம்பிக்கும் என பல தரப்பும் கேட்டு வருகின்றனர். இதனால் ஷங்கர் இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்குவதற்காக இப்படத்தின் பட்ஜெட்டை சரிபார்த்து, 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை பட்ஜெட்டை குறைக்க வாய்ப்பு உள்ளதாக லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு விரைவில் லைக்கா நிறுவனம் பதில் கூறும் என ஷங்கர் எதிர்பார்த்துள்ளார். ஆனால் லைகா தயாரிப்பு நிறுவனம் ஷங்கரை மதிக்கவே இல்லையாம். இதனால் ஷங்கர் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம்.

கமலஹாசனும் விக்ரம் படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தியன்-2 படப்பிடிப்பு வேலை தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் இந்த செயலால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்