Tamil Cinema News | சினிமா செய்திகள்
சங்கரை நம்பி நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்கள் லிஸ்ட்.. நம்ம ஆளு ராசி எப்படி!
தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் மிக முக்கியமான இயக்குனர் ஷங்கர்.
இயக்குனர்களுக்கு எல்லாம் இயக்குனர் என்ற பெயரைப் பெற்று தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக வலம் வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். பல வருடங்களாக உருவாகும் இந்த படத்திற்கு இன்னும் விடை தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க சங்கரை நம்பி மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை தயாரித்து நஷ்டம் அடைந்து அதன் பிறகு படம் தயாரிப்பதை விட்ட பல தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர்.
அந்தவகையில் ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரனை சொல்லலாம். ஐ என்ற படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தால் தன்னுடைய சொத்தை எல்லாம் விற்று விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
சமீபத்தில் ஷங்கர் பார்வையில் விழுந்த லைகா நிறுவனம் 2.O என்ற படத்தால் பலத்த நஷ்டத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
சங்கர் தன்னுடைய பிரம்மாண்டத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக தயாரிப்பாளர்கள் காசை தண்ணீராக செலவு செய்து பெரிய அளவு வெற்றி படங்களை கொடுக்காதது, அவரின் மீதான நம்பிக்கையை கோலிவுட் வட்டாரங்களில் குறையச் செய்து விட்டதாம்.
இனியாவது சங்கர் பிரம்மாண்டங்களில் கவனம் செலுத்தாமல் கதையில் கவனம் செலுத்தி தன்னால் நாசமா போன தயாரிப்பாளர்களை காப்பாற்றினால் நல்லது என்கிறார்கள்.

shankar-cinemapettai
