Connect with us
Cinemapettai

Cinemapettai

lokesh-kanagaraj-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜை நம்பி பல கோடிகளை இறக்கும் சங்கர் மற்றும் மணிரத்னம்.. நெருப்பில்லாமல் புகையாது!

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தான் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் என்ற மூன்று படங்களே போதும். இவரது வெற்றியைப் பறைசாற்றுவதற்கு.

அடுத்ததாக கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் எனும் படத்தை எழுதி இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை மணிரத்னம் சங்கர் உட்பட பலர் மூத்த இயக்குனர்கள் அவரை தங்களது வீட்டிற்கு அழைத்து கொண்டாடியது நினைவிருக்கலாம். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது.

அந்தப் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்களே. அதுதான் இங்கு நடந்துள்ளது. சங்கர் மற்றும் மணிரத்தினம் உட்பட பல முன்னணி இயக்குனர்கள் சேர்ந்து தியேட்டர் மற்றும் ஓடிடிக்கு தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

மணிரத்தினம் மற்றும் சங்கர் இருவரும் இணைந்து நடத்தும் இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு Rain on Films PVT என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.

லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு தற்போது எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் அவரது படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்புதான் அதிகரித்துள்ளது.

shankar-lokesh-kanagaraj-maniratnam

shankar-lokesh-kanagaraj-maniratnam

Continue Reading
To Top