Tamil Cinema News | சினிமா செய்திகள்
சங்கருக்கு முன்னாடியே தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் இவர்தான்.. உண்மையை உடைத்த பிரபலம்
தமிழ் சினிமாவை உலக அளவில் பெருமைப்படுத்தியவர் சங்கர் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் சங்கர் வந்தவுடன் தான் தமிழ் சினிமா மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது எனவும் கூறி வருகின்றனர்.
ஷங்கர் தன்னுடைய யோசனைகள் அனைத்துமே கம்ப்யூட்டர் வடிவில் ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். அதனால் காலத்திற்கு ஏற்ப அவரது படத்தின் பட்ஜெட்டில் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.
ஆனால் தமிழ் சினிமாவில் ஷங்கருக்கும் முன்பே பிரமாண்ட படங்களை இயக்கி கெத்து காட்டியவர் ஆபாவாணன். ஊமை விழிகள் எனும் பிரமாண்ட படத்தை கொடுத்ததும் இவர்தான்.
ஒரு காலத்தில் ஆபாவாணன் படங்கள் என்றாலே ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு அந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் சங்கர் எல்லாம் அவருக்கு சோட்டா பச்சா என்கிறார்கள்.
அந்த கால கட்டங்களில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இயக்கியுள்ளார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஆபாவாணன் திரைப்படங்களில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து தமிழ் சினிமாவை இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு இருந்தது குறிப்பிடதக்கது.
