Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கதறிய இயக்குனர் ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்துக்கு என்ன காரணம்.. பகீர் தகவல்

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இரவில் நடக்கும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ராட்சத கிரேனில் லைட் செட் செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று இரவு நடந்து வந்தன.

அப்போது கிரேன் அறுந்து விழுந்து கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் கிருஷ்ணா உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அதை நேரில் பார்த்த தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் கூறுகையில், `பொதுவா இரவு ஷூட்டிங் நடக்கும்போது 9.30 மணிக்கு இடைவேளை விடுவாங்க. அந்தச் சமயத்தில் அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்தது.

லைட்டிங் பணிகள் அப்போது நடந்தது. அந்த சமயத்தில் ஷங்கர் சார், கமல் சார், காஜல் எல்லாரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

திடீர்ன்னு பார்த்தா பெரும் சத்தத்தோட கிரேன் கீழ விழுந்துருச்சு. எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல. தூரத்தில் இருந்து ஷங்கர் சார் தலையில அடிச்சிட்டு கதறி அழுதுட்டே ஓடி வந்தார். கிரேனுக்குக் கீழ நின்னுட்டு இருந்தவங்க ரத்தம் வழிந்தபடி தவித்தார்கள்.

அவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றோம். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. கிரேன் பாரம் தாங்க முடியாம அறுந்துவிழுந்தததால் விபத்து நடந்ததாக சொல்றாங்க. ஷூட்டிங்குக்குப் பயன்படுத்துற கிரேன் இல்லையாம்.

அதனால் பாராம் தாங்காம உடைஞ்சது என்கிறார்கள். காற்று அதிகமாக அடித்த காரணத்தால் சரிந்துவிழுந்துவிட்டது. பிரேக் சமயத்தில் நடந்ததால் 3 பேர் இறந்தார்கள். பிரேக் இல்லாத சமயத்தில் விழுந்திருந்தால் நிறைய பேர் செத்திருப்பாங்க.. என்றார் கண்ணீருடன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top