Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரம்மாண்டமான இந்தியன் 2 படத்தின் மொத்த கதையும் இணையத்தில் லீக்.. உச்சகட்ட கடுப்பில் சங்கர்
கால் நூற்றாண்டுக்கு முன்பே வந்த இந்தியன் படத்தில் வயசான தாத்தா, புத்திசாலித்தனமாக சமூக ஊழல்வாதிகளை வர்மக்கலை மூலம் போட்டுத் தள்ளுராரு, இந்தியன்.
இயக்குனர் சங்கர் முன்னதாக அந்நியன் படத்தில் 300 பேரையும், எந்திரன்2 படத்தில் 3,000 ரோபோக்களையும் வைத்து பிரம்மாண்டமாக சண்டைக்காட்சிகளை எடுத்துள்ளார்.
தற்போது அதுக்கும் மேல போயி இந்தியன்2 படத்தில் 30 ஆயிரம் பேரை வைத்து சண்டைக் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் ஈடுபடும் பொழுதுதான், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிலர் உயிரிழந்தனர்.
அதற்கு பின்பு, இந்தியன் 2 படமானது, மருதநாயகம் பட வரிசையில் சென்றுவிடும் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது, அந்த நிலை மாறி, இந்தியன்2 படத்தின் “போஸ்ட் புரொடக்சன்” இன்று முதல் துவங்க உள்ளது.
கொரோனா ஊரடங்கு முடிந்தபின்பு, சென்னையில் இந்தியன்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. கூடிய விரைவில் இந்தியன்2 படமானது வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்தின் கதை என்னவென்றால், ஒரு வயசான சுதந்திர போராட்ட வீரர், ஊழல் செய்யும் அதிகாரிகளைகளை எடுப்பது தான். இந்தியன் படத்தில் அரசு அதிகாரிகளை களை எடுத்ததைப் போல இந்தியன் 2 படத்தில் அரசியல்வாதிகளில் ஊழல் செய்பவர்களை களை எடுப்பது தான் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
இறுதியில் போலீசாரிடம் தானாகவே இந்தியன் தாத்தா சரணடைந்து விடுவார் என்பதை போல கதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடைவேளைக்கு பிறகுதான் இந்தியன் படம் செம்ம மாஸாக இருக்குமாம்.
இதில் சங்கர் தன்னுடைய பிரம்மாண்டத்தை கொஞ்சம் தூவி கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து உருவாக்கி வருகிறார். இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் கதை வெளியாகியுள்ளதால் கமலஹாசன் மற்றும் ஷங்கர் தரப்பு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
எப்படி கதை லீக் ஆனது என தனது அசிஸ்டென்ட் டைரக்டர்களிடம் டென்ஷனாகி கத்திக் கொண்டிருக்கிறாராம் ஷங்கர்.
