fbpx
Connect with us

Cinemapettai

27 வருடமாக சங்கர் மீது தீராத கோபத்தில் இருக்கும் இளையராஜா.. காரணம் இதுதான்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

27 வருடமாக சங்கர் மீது தீராத கோபத்தில் இருக்கும் இளையராஜா.. காரணம் இதுதான்!

ஷங்கர் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் இதுவரை இணையாததற்கு 27 வருட பகை இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இசை சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் இளையராஜா. என்னதான் புதிய பட பாடல்கள் வந்தாலும் இன்றும் இளைஞர்கள் இளையராஜாவின் பாடல்களை தேடி தேடி கேட்டு வருகின்றனர்.

அதேபோல் தமிழ் சினிமாவில் இயக்குனர் வட்டாரங்களில் மிகப்பெரிய உயரத்தை தொட்டவர் சங்கர். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் நம்பர்-1 இயக்குனரும் இவர்தான்.

ஆனால் இளையராஜா மற்றும் ஷங்கர் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. ஷங்கரின் முதல் படத்தில் இருவரும் இணைய இருந்ததாகவும், இளையராஜாவின் முன்கோபத்தால் அந்த படம் கைநழுவி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ilayaraja-cinemapettai

ilayaraja-cinemapettai

சங்கர் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். இந்த படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

முதலில் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் குஞ்சு மோகன் இருவரும் இளையராஜா தான் இந்த படத்தில் இசையமைக்க வேண்டும் என நினைத்து இருந்தார்களாம்.

shankar-cinemapettai

shankar-cinemapettai

ஆனால் இளையராஜாவின் ஆஸ்தான இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க இருந்த நடிகரை தன்னுடைய படத்திற்கு சங்கர் அழைத்துக் கொண்டதால் அந்த படம் கைவிடப்பட்டதாம். மேலும் அந்த படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்க இருந்தாராம்.

இந்நிலையில் ஷங்கர் இளையராஜாவின் அலுவலகத்திற்குச் சென்று பாடல்கள் வாங்க நெடு நேரம் காத்துக்கொண்டிருந்தாராம். மேலும் இளையராஜா போட்ட ட்யூன்கள் எதுவும் சரியில்லாத நிலையில் சங்கர் அவற்றை ரிஜக்ட் செய்துள்ளார்.

இதனால் டென்ஷனான இளையராஜா, உன்னுடைய படத்திற்கு பாடல்கள் போட முடியாது எனக் கூறி அனுப்பிவிட்டாராம். இளையராஜா இதே போல் அடிக்கடி கோபப்பட்டு பல பேருடன் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top