fbpx
Connect with us

Cinemapettai

ரஜினி கமல் இனி வேண்டாம்.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட்-2வில் மற்றொரு முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்த சங்கர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி கமல் இனி வேண்டாம்.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட்-2வில் மற்றொரு முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்த சங்கர்

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் கமல் ஆகியோர்களின் படங்களை இனி இயக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளாராம் பிரமாண்ட இயக்குனர் சங்கர்.

ரஜினிக்கு வயதாகி விட்டதால் இனி அதிகளவு அவர் கஷ்டப்பட்டு நடிக்கும் படங்களை தேர்வு செய்ய மாட்டார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரங்கள். அதேபோல் கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் அனைத்துமே பாதியில் நின்று மற்றவர்களையும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஷங்கர் கமல் கூட்டணியில் நீண்ட நாட்களாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன்2. படப்பிடிப்புகள் இன்னும் முடிவடையாத நிலையில் படம் எப்போது வெளிவரும் என்ற தகவலே இல்லை.

இதனால் சங்கரும் வேறு படம் பண்ண முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளாராம். ரஜினி கமல் ஆகியோரின் படங்களை இயக்கியது போதும்.

அதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் தளபதி விஜய் உடன் கூட்டணி அமைக்கலாம் என முடிவு செய்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் அந்த படம் முதல்வன் 2 என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது படக்குழு.

Continue Reading
To Top