2.0 என்ற பிரமாண்ட படத்தை எடுத்து வருகின்றார் ஷங்கர். இப்படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எப்படியும் பாகுபலி-2 வசூல் சாதனையை இப்படம் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஷங்கர் Demonetization போது பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவிற்கு GST தாண்டி வேறு சில வரிகளும் உள்ளது, இதை ஷங்கர் எதிர்த்துள்ளார். உடனே ஒரு சில ரசிகர்கள் ‘என்ன சார் நீங்கள் தானே வரி கட்ட வேண்டும் என்று படத்தில் சொல்கிறீர்கள், தற்போது இப்படி சொல்லலாம?’ என கேட்டனர்.

இதுபோல் கேள்வி கேட்ட பலரையும் ஷங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் ப்ளாக் செய்துள்ளார், இது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.