Rajini-Shankar-2Point0

இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்சய் குமாரை வைத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக இயக்கி வரும் 2.0 பற்றித்தான் இப்போது பேச்சு.

அந்த படத்தில்,ரஜினிகாந்த் குள்ளராக நடிக்க போகிறார் என்பது தான் இரண்டு நாட்களாக வரும் வைரல் செய்தி.

ஆனால், அவர் உண்மையிலேயே அப்படி நடிக்கப்போகிறாரா? இல்லையா? வில்லன் அக்சய் குமார் 12 வேடங்களில் நடிக்கப்போகிறாரா? என்பதை ஒத்துக்கொள்ளவோ, மறுக்கவோ படக்குழு தயாராக இல்லை.

ஆனாலும், ஷங்கர் தன் டிவிட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்கு சொன்ன ஒத்தை பதில் இங்கே முக்கியமானது.

அக்சய் 12 வேடங்களிலும், ரஜினிகாந்த் குள்ள வேடத்தோட மொத்தம் 5 வேடங்களில் நடிப்பது உண்மையா? என்ற கேள்விக்கு ஷங்கர் ‘நோ’ என்று ஒரு பதிலை சொல்லியுள்ளார்.